கோபம் மனித இனத்தின் முதல் எதிரி. அச்சம் கலந்த கோபம் பலஇனங்களையே அழித்திருக்கிறது. கோபம் ஏவிவிடப்பட்ட ஏவுகணைபோன்றது. ஒன்று அயலாரை அழிக்கும். அடக்க நினைத்தால் தன்னையே அழிக்கும். இதையே நமது பொய்யாப்புலவன் வள்ளுவர்'தன்னையே கொல்லும் சினம்' என்கிறார்.
"எனக்கு கோபம் வந்ததுன்னா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது''என்று சிலர் ஆவேசமாக பேசுவார்கள். அப்படி எக்கச்சக்கமாக உணர்ச்சிவசப்பட்டால் அழிவு நிச்சயம் என்கிறது ஒரு புதிய ஆய்வு.
சுவீடன் நாட்டில் உள்ள 'ஸ்ட்ரெஸ்' ஆய்வு மையம் இதைகண்டுபிடித்துள்ளது. 2 ஆயிரத்து 755 தொழிலாளர்களை 1992 முதல் 2003வரை ஆய்வு செய்தனர். இவர்கள் அனைவரும் எவ்வித இதய பாதிப்பும்இல்லாதவர்கள். ஆய்வு முடிவில் இவர்களில் 47 பேர் மாரடைப்புமற்றும் இதய வியாதிகளால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் சிலர்இறந்துவிட்டனர்.
இவர்களின் பாதிப்புகளுக்கு அடிப்படையாக இருந்தது கோபம்தான். பொருளாதார காரணங்கள், வேலைப்பளு,பிடிவாதகுணம், உடலியல் பாதிப்புகள், உறவுகளால் ஏற்படும் பிரச்சினைகள் உள்பட பல்வேறு காரணங்களால்கோபம் உற்பத்தி ஆகிறது.
அதேபோல் அலுவலக ரீதியாகப் பார்த்தால் சில காரணங்களால் கோபம் வருவது கண்டுபிடிக்கப்பட்டது.அதாவது சொல்லிக் கொள்ளாமல் சில காரியங்களில் ஈடுபடுவது, வெளியே சென்றுவிடுவது, மேலதிகாரிமற்றும் உடன் பணி செய்பவர்களுடன் ஒத்துழைப்பு கிடைக்காதது/ கொடுக்காதது போன்றவை குறிப்பிடத்தக்ககாரணங்கள்.
இவ்வாறாக உருவாகும் கோபமும், அதிகப்படியான உணர்ச்சிகளும் இதயம் சம்பந்தமான பல பாதிப்புகளைஏற்படுத்துகின்றன. எனவே கோபத்தைக் குறைத்தால் நலமாக வாழலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதுசரி...இந்த ஆபத்தான கோபத்தைக் எப்படிக் குறைப்பது?. அதற்கும் ஆய்வாளர்கள் சில வழிகளை சொல்லிஇருக்கிறார்கள். அவை வருமாறு:-
எந்த எண்ணங்களையும் மனதில் அடக்கி வைக்காமல்நேரடியாகவெளிப்படுத்திவிட வேண்டும்.
யாரையும் சந்திக்க நேர்ந்தால் தாமதப்படுத்தாமல் குறிப்பிட்ட நேரத்தில்சந்தித்துபேசுங்கள்.
கவலைகள் ஏற்படும்போது மனதில் தேக்கி வைக்காமல் வெளிப்படையாக அழுதுதீர்த்துவிடலாம்.
எந்த ஒன்றைப் பற்றியும் நடந்து முடிந்தபிறகு மீண்டும்ஞாபகப்படுத்திபார்க்காமல் அமைதியாக இருக்கப்பழக வேண்டும்.
சந்தோஷ வாழ்வுக்கு வழிதேடுபவர்கள் முக்கியமாக இந்த 4 வழிகளைப் பின்பற்றினாலே உடலில் பலதொல்லைகள் தொற்றிக் கொள்ளாமல் தடுத்துவிடலாம்.
No comments:
Post a Comment